கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்டபகுதியில் உள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

28

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் யுவதியின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாய்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதிக்கு சுமார் இருபது வயது இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது சடலத்தின் முகப்பகுதியில் இடிபட்டு பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில வேளைகளில் இது வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியையும் குற்றத் தடயவியல் பொலிஸாரையும்  அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE