யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையம் 125 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

22

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை 125 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலையத்தைப் போன்றே ஹிங்குராங்கொட விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் இதை ஆய்வு செய்வதற்காக இந்திய ஆய்வுக் குழுவினர் மூவர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

SHARE