பெண் ஒருவர் தனது 22 வயதான காதலுனுக்குத் தன் 10 வயதான மகளை இரையாக்கிய சம்பவம் மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

26

மினுவாங்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது 22 வயதான காதலுனுக்கு தான் பெற்ற 10 வயதான மகளை இரையாக்கிய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 வயதான சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு உதவியதாக 38 வயதான தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 38 வயதான பெண்ணும், 22 வயதான அவரது காதலனும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட பதில் நீதவான் சரல கருணாரட்ன உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகளையும் இரண்டாம் திருமணத்தின் மூலம் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டாம் கணவரின் உதவியாளரான 22 வயதான இளைஞருடன் இந்த பெண் தொடர்பு பேணி வந்ததாகவும், அந்த நபருக்கு தனது மகளை இரையாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது

SHARE