மகிழ்ச்சியில் துள்ளி குதித்த சென்றாயன்.

30

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சென்றாயனை காண வந்த அவர் மனைவி, தான் கர்ப்பமாக இருப்பதாக கூற மகிழ்ச்சியில் சென்றாயன் துள்ளி குதித்தார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஒளிப்பரப்பாகும் புரோமோவில், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சென்றாயனை பார்க்க அவர் மனைவி வருகிறார்.

பின்னர், சென்றாயனிடம் நீ அப்பா ஆகிவிட்டாய் என தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை மனைவி சொல்கிறார்.

இதையடுத்து உற்சாகத்தில் நான் அப்பா ஆகிவிட்டேன் என துள்ளி குதிக்கிறார் சென்றாயன்.

இதன்பின்னர் கண்கலங்கும் மனைவியை கட்டிபிடித்து கொள்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் சென்றாயனுக்கும் அவர் மனைவிக்கும் முகத்தில் சந்தனம் பூசிவிடுவது போல காட்டப்பட்டுள்ளது.

SHARE