இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கைது.

15

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி, Milan, Navigli பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 40 வயதான இலங்கையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Congo நாட்டு பெண் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி வந்த பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE