கிளிநொச்சி தெருக்களில் மகிந்தவின் துண்டுப் பிரசுரங்களோடு அலையும் சிறுவர்கள்

100

 

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் வவுனியா மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரச்சாரத்திற்காக அலைய விடப்பட்டுள்ளனர்.

பன்னிரண்டு மற்றும் பதின்மூன்று வயதுகளையுடைய இந்த சிறுவர், சிறுமிகள் மகிந்தவின் படம் பொறித்த சட்டை அணிவித்து கொண்டு திரிகின்றனர்.

மிகமோசமான சிறுவர் துஸ்பிரயோகமாக இந்த நடவடிக்கை காணப்படுவதுடன், இந்த சிறுமிகள் பாலியல் துஸ்பியோகத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாய நிலையும் இருப்பதாக சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே சிறுவர் சிறுமியர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் வேண்டப்படுகின்றனர்.

SHARE