ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4 X 400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

51

ஆசிய விளையாட்டு விழாவில் இனுற இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 4 X 400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி இரண்டாவது தகுதிச்சுற்று ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

ஜகர்த்தா குளோரா பூங்கா சர்வதேச விளையாட்டரங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பந்தயத் தூரத்தை 3.06.66 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை அணி வீரர்களான அருண தர்ஷன, அஜித் பிரேமகுமார, பசிந்து லக்ஷான் மற்றும் கலிங்க குமார ஆகியோர் இலங்கை அணிக்கு மேலும் ஒரு எதிர்பார்பை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் போட்டியை ஆரம்பித்து வைத்த அருண தர்ஷன சிறப்பான ஆரம்பத்தை பெற்று தனது 400 மீற்றர் தூரத்தை ஓடி முடித்து இரண்டாவது வீரராக எல்லைக்கோட்டை எட்டி கோலை அஜித் பிரேமகுமாரவிடம் கொடுத்தார். ஆனால் அஜித் சற்று சறுக்கி தனது ஓட்டத்தை மூன்றாது நபராகவே முடித்தார். இதனால் ஏனைய இருவரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். இறுதியில் மற்றைய இருவரும் அதே மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டு மீதியிருந்து 800 மீற்றரையும் ஓடி முடித்தனர்.

இந்தப் போட்டியில் முதலிடத்தை கட்டாரும் இரண்டாமிடத்தை பஹ்ரைனும் பிடித்தது. முதலம் இடம் பிடத்த கட்டார் அணியினர் பந்தயத் தூரத்தை 3.06.08 செக்கன்களில் ஓடி முடித்தனர். ஆண்களுக்கான 4 X 400  மீற்றர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி நாளை இலங்கை நேரப்படி இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE