போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன ஈழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சி: பீரிஸ்

98

 

GL_Peris_2போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மாகாணசபை அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் சம்பிக்க ரணவக்க மாகாணசபை அதிகாரங்களை குறைத்து ஆளுனரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டுமென கோருகின்றார்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையில் பாரியளவில் கருத்து முரண்பாடு நிலவி வருகின்றது.

எதிர்க்கட்சியின் பிரதான இலக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதேயாகும்.

முஸ்லிம்களுக்கு கல்முனையில் தனியான அலகு தேவையென ரவூப் ஹக்கீம் கோரியதாகவும் அதனை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன சமூகங்களின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த முஸ்லிம் தலைவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கவில்லை.

அரசாங்கம் இனவாத அரசாங்கம் அல்ல�� இதன் காரணமாகவே பாலஸ்தீன இராச்சியம் உருவாவதற்கு ஜனாதிபதி பூரண ஆதரவளித்தார்.

சில இணக்கப்பாடுகளின் அடிப்படையில் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்ல நன்றியறிந்த மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

SHARE