போர் மெளனிப்பின் நோக்கம் புலிகளில் எஞ்சுவோர் அனைவரும் தாம் ஒதுங்கிவாழவேண்டும் என்ற செய்தியை ஒருபோதும் சொல்லவில்லை.

44

 

போர் மெளனிப்பின் நோக்கம் புலிகளில் எஞ்சுவோர் அனைவரும் தாம் ஒதுங்கிவாழவேண்டும் என்ற செய்தியை ஒருபோதும் சொல்லவில்லை.

போர் மெளனிப்பின் சரியான காரணங்களை சரிவர புரிந்துகொள்ளாத எமது போராளிகள் சிலர் புலிகளுக்கு இலங்கையில் இனி அரசியல் இல்லை எனும் தவறான முடிவை எடுத்து புலிகளின் வரலாற்று துரோகிகளுக்கு தாம் முண்டுகொடுக்க முனைகிறார்கள்.
ஆயுத மெளனிப்பின் ஊடாக புலிகள் தமது விடுதலை போராட்டத்தை சகல வழிகளிலும் கைவிட்டுவிட்டார்கள் என்ற தவறான அர்த்தத்தில்தான் போர் மெளனிப்பின் பின்னர் எமது போராளிகள் பலர் தம்மை சமூகத்திலிருந்து தாமே பிரித்து தாமும் தமது பாடுமாக வாழ்வோம் எனும் சுயத்தை பேணி ஒதுங்கி வாழ்கிறார்கள்.அவர்களின் இந்த தவறான முடிவே எமது போராளிகளுக்கான வெறுமைகளை தமிழர் தாயகத்தில் உருவாக்கிவருகின்றது.அரசியல் என்பது போராடியவர்களுக்கு அப்பாற்பட்டதெனும் குறுட்டுத்தனமான சிந்தனைகளை எமது போராளிகள் கைவிட்டு தமக்கான அரசியல் பலத்தினை உருவாக்க எம்மோடு கைகோர்க்கவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.இன்று எமது போராளிகளின் கருத்துக்களுக்கு தற்போதைய அரசியல்வாதிகள் உட்பட்ட அவர்களின் அல்லக்கைகள்வரை சிறிய அளவிலான மரியாதையைக்கூட கொடுப்பதாக எமக்கு தெரியவில்லை.இந்த கேவலமான சூழ்நிலை எமக்கு தொடருமாயின் நாம் ஆயுதத்தை மட்டும் இயக்கத்தெரிந்தவர்கள், எமக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதெனும் அசிங்கமான அவகெளரவத்தைத்தான் நாம் தொடர்ந்து சந்திக்க நேரிடும்.ஆகவே நாம் ஆயுதம் ஏந்தியது எமது மக்களுக்கான ஒரு அரசியல் விமோசனத்துக்காகத்தான் என்பதை போராளிகளே எம்முடன் இணைந்து நிரூபிக்க வாருங்கள்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீதும். பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மீதும் விசாரணை,
இலங்கை அரசு அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீதும். பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மீதும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் அவர்களது பதவி பறிக்கப்படவேண்டும், இந்த விடயத்தை இலங்கை அரசுக்கும் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பகிரங்கமாகவே தெரிவிக்கின்றேன். இன்பராசா.

ரிசாத் பதியுதீன்
ரிசாத் பதியுதீன் மீது மன்னார் ஆயர் சுமத்திய குற்றச் சாட்டை அடிப்படையாக வைத்து விசாரணை செய்யப்படவேண்டும். மன்னார் நீதிபதியை அச்சுறுத்திய குற்றச் சாட்டு வில்பத்து அத்து மீறிய குடியேற்றம் அளவுக்கு அதிக சொத்து சேர்த்தது போன்ற பல குற்றச் சாட்டுகள் அவர் மீது உள்ளன.

அவர் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக் கொண்ட அமைச்சுப் பதவியை கேள்விக் குறியாக்கியதுடன் இலங்கையில் நீதிக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது
அது தொடர்பான முந்தய பத்திரிகைச் செய்தி.
https://thinakkathir.com/?p=40156
ஹிஸ்புல்லா.
தான் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினராகப் பதவியேற்றதும் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி ஓட்டமாவடி இந்து ஆலயத்தை கையகப்படுத்தி ஓட்டமாவடி பள்ளிவாசல் நிருவாகத்திடம் கொடுத்து தனது நிதியில் மார்க்கத் கட்டியதாகவும்.

காத்தான்குடியில் தனக்கு எதிராக வந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நீதிபதியை மாற்றி தனக்கு வேண்டிய நீதிபதியை நியமித்து தீர்ப்பை சாதகமாக மாற்றியதாகவும் முஸ்லிம் இலங்கர்களுக்கு ஆயுதம் கொடுத்ததாகவும் ஹிஸ்புல்லா பகிரங்க வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?time_continue=2&v=IeFEe9VH7F0

மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி என்பது இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தை பறித்து பள்ளிவாசலுக்குக் கொடுப்பதற்க்கா.

இலங்கையில் ஜனாதிபதி,பாராளுமன்றம்,சட்ட அமைச்சு,நீதிச் சேவைகள் ஆணைக்குழு,சட்டமா அதிபர் திணைக்கள,உயர் நீய்திமன்றம்,சட்டத்தரணிகள் சங்கம் இவை அனைத்தையும் தாண்டி.தனக்கு எதிரான தீர்ப்பை எழுதிய நீதிபதியை மாற்றி தனக்குச் சாதகமான நீதிபதியை நியமித்து தனக்குச் சார்பான நீதியைப் பெற்றதாக veedio அறிக்கை மூலம் ஒப்புதல் அறிக்கை விட்டுள்ளார்.

இது இலங்கை அரசையும் இலங்கை நீதித் துறையையும் கேள்விக் குடியாகியுள்ளதுடன் மக்களுக்கு அரசு மீது அவனம் பிக்கையையும் ஏற்ப்படுத்தி உள்ளது என்பதைச் பகிரங்கமாக சிங்கள மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இலங்கை நாட்டின் நிர்வாக மொழியாக சிங்கள மொழியும் தமிழ் மொழியும்
இணைப்பு ஆங்கிலம் மொழிகளுகம்

அங்கீகாரம் பெற்று உள்ளன பாராளுமன்றம்.அல்லது அரச கரும மொழிகள் திணைக்களம். அங்கீகாரம் கொடுக்காத அரபு மொழியில் வரவேட்ப்புப் பலகைகள் காத்தான் குடி பிரதான பாதையில் இருக்கின்றது அப்படியானால் அரசின் அங்கீகாரமின்றி இவர்களால் எப்படி வைக்க முடியும் காத்தான்குடி இலங்கையில் இல்லாத ஒரு நாடா அது ஒரு தனி நாடா.என்பதை இலங்கை அரசும் சிங்கள மக்களும் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதை பணிவோடு கேட்டுக் கொள்ளுகின்றேன்
கந்தசாமி இன்பராசா(தலைவர்)
புனர்வாழ்வுவளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

 

SHARE