எனை நோக்கி பாயும் தோட்டா கிளைமாக்ஸ் இந்த இடத்தில் தான்! போட்டோ வெளியிட்ட கவுதம் மேனன்

45

தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை கவுதம் மேனன் இயக்கிவருகிறார். பைனான்ஸ் பிரச்சனையால் பல முறை ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால் தற்போது தான் இந்த படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது மும்பையின் ஒரு உயரமான பில்டிங் மொட்டை மாடியில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். நடிகர் சசிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

SHARE