கால்பந்து: யு.இ.எப்.ஏ. தலைவர் விருது 2018 – டேவிட் பெக்காம் வென்றார்

42
கால்பந்து: யு.இ.எப்.ஏ. தலைவர் விருது 2018 - டேவிட் பெக்காம் வென்றார்
2018ம் ஆண்டுக்கான யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான விருதை கால்பந்தின் முன்னாள் நட்சத்திர வீரரான டேவிட் பெக்காம் வென்றார்.
யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான இந்த விருது, சிறந்த சாதனைகள், தொழில்முறை சிறப்பம்சம் மற்றும் முன்மாதிரியான தனிப்பட்ட குணங்களை அங்கீகரித்து வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.
மகத்தான வாழ்க்கை மற்றும் மனிதாபிமான முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த விருது இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் முண்னணி வீரரான டேவிட் பெக்காம்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

டேவிட் பெக்காம், யுனிசெப் மற்றும் மலேரியா நோய் தொற்று தடுப்பு அமைப்புகளில் முக்கிய உறுப்பினராகவும் இவர் திகழ்கிறார். மேலும் ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடும் குழந்தைகளுக்காக நிதியுதவி வழங்கியுள்ளதோடு, அங்கு அறக்கட்டளையும் நிறுவி உதவிகளை புரிந்து வருகின்றார்.

ஆறு பீரிமியர் லீக் சம்பியன் லீக் பட்டங்கள், இரண்டு எஃப்.ஏ கிண்ணங்கள் மற்றும் சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களையும், ஒரு லா லிகா கிண்ணம் என ஏராளமான சம்பியன் பட்டங்கனை பெக்காம் வென்றுக் கொடுத்துள்ளார். இவர் முன்னணி கழக அணிகளான மென்செஸ்டர் யுனைடெட், ரியல் மெட்ரிட், ஏ.சி. மிலான், பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் ஆகிய கழக அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். மேலும் மென்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணிகளின் சிறந்த மத்திய கள வீரர் என்ற விருது, சிறந்த கால்பந்து வீரர் விருது என பல விருதுகளை பெற்றுக்கொண்ட பிறகு, இந்த விருதை பெக்காம் பெற்றுள்ளார்.

இந்த விருது குறித்து டேவிட் பெக்காம் கூறுகையில், “இது வரலாற்றை உருவாக்கிய ஒரு நேரம். கழக அணிக்காக நாம் எதாவது ஒன்றை உருவாக்கியுள்ளோம். மற்றும் சம்பியன்ஸ் லீக் வென்றது நம்பமுடியாத வெற்றி ஆகும். எனவே, அது ஒரு அற்புதமான தருணம். என் வாழ்க்கையில் சில நேரங்களில் சிறந்த வீரர்கள், மிக பெரிய மேலாளர்களுக்கு கீழ், மிக பெரிய கழகங்களுக்காக விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்தது. நான் மூன்றிலும் வெற்றிபெற்றேன் என நினைக்கிறேன், மென்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக விளையாடியது அற்புதமான தருணம். என்று கூறினார்.

SHARE