அமெரிக்காவில் தொலைக்காட்சி நடிகை சுட்டுக்கொலை

41

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைக்காட்சி நடிகையொருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வனோசா மார்க்வெஸ் என்ற நடிகையின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இடம்பெற்ற சம்பவமொன்றின் போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

49 வயதான நடிகை வாடகை வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் வீட்டின் உரிமையாளரின் அழைப்பினை தொடர்ந்து காவல்துறையினர் நடிகையின் வீட்டிற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் அங்கு சென்ற வேளை நடிகை உடல்ரீதியாக மிகவும் பாதிக்கப்ட்ட நிலையில் காணப்பட்டார்,அவர் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் அவர் திடீரென தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயன்றார் அவ்வேளை காவல்துறையினர் தற்பாதுகாப்பிற்காக மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE