முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. படபிடிப்பு புகைப்படங்கள் வரிசையாக வெளியானது.
இதில் நடிகை வரலட்சுமியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் தான் அடிக்கடி ஷூட்டிங் தளத்திலிருந்து முக்கிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். இதனால் ரசிகர்களுக்கு குஷி தான்.
இந்நிலையில் அவர் தற்போது இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. விஜய்யுடன் நடிக்க இருந்த என் கனவு நினைவாகி இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க என கூறியுள்ளார்.