இரகசிய தகவலால் வசமாக சிக்கிய ஆறு பேர்! கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள்

29

வவுனியா – ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE