முயன்றால் முடியும்! சாதனை படைத்த வவுனியா இளைஞன்

24

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரால் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட பயணம் நிறைவடைந்துள்ளது.

வவுனியாவிலிருந்து சுமார் 244 கிலோ மீற்றர் தூரத்தினை கடந்து நேற்று இரவு 7.00 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தினை குறித்த இளைஞன் சென்றடைந்துள்ளார்.

முயன்றால் முடியும் என்ற மனோநிலையுடன் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வவுனியா, சூடுவெந்தபுலவை சேர்ந்த 31 வயதான மொஹமட் அலி என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்தியம்பும் வகையில்

இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக மொஹமட் அலி தெரிவித்துள்ளார்.

மேலும், மொஹமட் அலி வடமாகாண பரா ஒலிம்பிக்கின் மூன்று சக்கர வண்டி ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரசபையில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 2015ஆம் ஆண்டு மின்கம்பத்திலிருந்து விழுந்ததால் மொஹமட் அலிக்கு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தமை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE