போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

23

கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையிலுள்ள தனியார் பேரூந்து நிலையத்தில் போலி நாணயத்தாள்களை மாற்ற முயற்சித்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் அம்பாறையை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் ஆவார்.

இன்று காலை 8 மணியளவில் கொழும்பு பெஸ்தியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றின் நடத்துனரிடம் 5000 ரூபா நாணயத்தாள் ஒன்றை சில்லறையாக மாற்றித் தருமாறு கோரியுள்ளார்.

இதன்போது, அந்த நாணயத்தாள் தொடர்பாக பேரூந்து நடத்துனருக்கு எழுந்த சந்தேகத்தில் அவர் புறக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட சோதனைகளின் போது மேலும் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 12 பறிமுதல் செய்ததாகவும் பொலிஸார், மேலதிக விசாரணைக்காக அவரை குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைத்தனர்.

SHARE