யாழ் சுன்னாகம் பகுதி விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு

30

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வம், உடுவில் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் 9 கிராம் 639 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE