மகிந்தவும் மைத்திரியும் பேயும் பிசாசும் தான்-மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! – இளைஞர் அணி சிவகரன்

113

 

மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி கடும் தாக்கு!
சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலில் எத்தகைய கோரிக்கைகளும் நிபந்தனைகளும் இன்றி, பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தமை தெரிந்ததே.
இந்த அதிரடி அறிவிப்பால் உலகத்தமிழர்கள் பலருடைய கவனத்தையும், ஆதரவையும் இளைஞர் அணி பெற்றிருக்கிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் குறித்த முடிவால் கடும் அதிருப்தியும், வேதனையும், கோபமும் அடைந்துள்ள இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு,
“நாங்க உங்கள தமிழரசுக்கட்சியின்ட தலைவரா வேலை பார்க்க தெரிவு செஞ்ஞோமே ஒழிய, சுமந்திரனுக்கு ‘பீஒன்’ (peon) வேலை பார்க்க தெரிவு செய்யேல்ல.” என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதன்பின்னரே சிவகரன் கூட்டமைப்பின் முடிவை எதிர்க்கும் இளைஞர் அணியின் முடிவை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தியதாக நம்பகரமாக அறியக்கிடைக்கின்றது.
தொடர்ந்துகொண்டிருக்கும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் கடும் தாக்குதல்களால் நிலைகுலைந்துபோயுள்ள மாவை.சேனாதிராசா, கூட்டமைப்பின் முடிவை எதிர்த்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து தனக்கு நெருக்கடிகொடுத்துவரும் திருமதி அனந்தி சசிதரன், ரவிகரன் போன்றவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதாக தெரியவருகின்றது.

 இது தமிழரசுக்கட்சி பிரச்சனையில்லை இது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு! உங்கட கட்சி தனியே முடிவெடுக்க முடியாது.உங்கள் ஒருகட்சியின் இளைஞரணியின் முடிவு கூட்டமைப்பில் செல்வாக்கு செலுத்த முடியாது!

இது ஏதோ கம்பன் கழக பேச்சு போல இருக்கிறது!எங்களுக்கும் இதுவெல்லாம் தெரியும் எப்பவும் தேர்தலை புறக்கணிக்க முடியாது. இனப்பிரச்சனை என்ற வட்டத்திற்குள் மட்டும் எப்போதும் சிந்திக்க முடியாது இது நாட்டுப்பிரச்சனை. தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியான கூட்டமைப்பு தன் மக்களுக்கு வழிகாட்டாமல் இருக்க முடியாது.

வெளிநாட்டு தொடர்பு இந்தியத்தொடர்பு இல்லாமல் தமிழருக்கு பிரச்சனை தீராது. சர்வதேச விசாரணைதேவை என்று கேட்கும் அவர் வெளிநாட்டு தொடர்பு இல்லாமல் எப்படியாம்.

வாயால தமிழ்த்தேசியம் கதைப்பதால் ஒண்டும் புடுங்கமுடியாது . தம்பி பட்டிமன்றத்திற்கு சரிவருவார் அரசியலுக்கு சரிவராது. முடிஞ்சால் ஒரு மக்கள் பேரணி நடத்த சொல்லுங்க!

பதவி ஆசை பற்றி கூறும் இவர் இளைஞர் அணித்தலைவர் பதவிக்காக அடிபட்டது தெரியும்.
மாகாணசபை தேர்தலில் அவர் தோல்விடைந்ததும் தெரியும்.மக்கள் பற்றி கதைக்கும் அவருக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு என்று பார்க்கவேண்டும். தம்பி ஏதோ பிளானோடதான் வந்திருக்கிறார் இவருடைய புலம்பல் சரியானதல்ல!

SHARE