அக்காவின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

40

திருகோணமலை, உப்பூரல் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட சீனன்வெளி பகுதியில் 14 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வருவதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுமியின் தாய் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மனைவியை (சிறுமியின் அக்காவை) கடைக்கு அனுப்பி விட்டு சந்தேகநபர் சிறுமிக்கு சிவப்பு நிறத்திலான போதை மாத்திரையை கொடுத்து குடிக்கச் சொல்லியுள்ளார்.

அத்துடன் குறித்த மாத்திரையை குடிக்காவிட்டால் அக்காவை கொன்றுவிடுவதாக கூறி மிரட்டியுள்ளனார்.

இந்த நிலையில் சிறுமியின் அக்கா கடையிலிருந்து வீடு திரும்பிய போது தங்கை மயங்கி கிடப்பதையும், கணவர் தங்கையை துஷ்பிரயோகம் செய்வதையும் அவதானித்து கணவரை தாக்கியுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்பின் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE