ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியின் தீர்மானமிக்க இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றிகளைப் பதிவுசெய்து தனது பிரிவில் முதலிடத்தைப்பிடித்து இலங்கை அணி.
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் இலங்கை அணி முதல்நாளில் சைனிஸ் தாய்பேவை 137 – 5 என்ற புள்ளிகள் கணக்கிலும், இந்தியாவை 101 – 29 என்ற அடிப்படையிலும் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள இரண்டாவது சுற்றுப் போட்டியில் இலங்கை அணி தொடரை நடத்தும் சிங்கப்பூர் அணியுடனும் மலேஷியா மற்றும் ஹொங்கொங் அணியையும் எதிர்த்தாடவுள்ளது.
இரண்டாம் சுற்றுக்கான போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.