பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் – வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்….

116

 

பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய  வீதிகள் அனைத்தும்  புனரமைக்கப்படும் – வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்….
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு 03-01-2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெற்ற விசேட ஒன்றுகூடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மடு திருத்தலத்துக்கு வருகை தரக்கூடிய அனைத்து பாதைகளும் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அவைகளை உடனடியாக புனரமைக்குமாறு அதிகாரிகளுக்கு இன்று பணித்தார், இதற்கமைவாக சம்பந்தப்பட்ட வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மன்னார் மாவட்ட பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் ஆகியோருடன்  நேரில் சென்று பார்வையிட்டதுடன், தற்போது உள்ளக வீதிகளை செப்பநிடத்தொடன்கியிருக்கும் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினரையும் பாராட்டினார்… அத்தோடு இந்த அனைத்து வீதிகளும் பரிசுத்த பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக செய்து கொடுக்குமாறும் பணித்தார்…
unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7)

 

SHARE