பிபா விருது வழங்கும் விழா 24 ஆம் திகதி

18

பிபா 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு விருது வழங்கும் விழா எதிர்வரும் 24 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.

இந்த கால்பந்தாட்ட விருது வழங்கும் விழாவில் விருதுக்கு தெரிவாகின்ற வீரர்களின் பெயர்கள் இறுதி நேரத்தில் அறிவிக்கப்படும் என பிபா அறிவித்தது.

எனினும் சிறந்த வீரர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பத்து பேர் கொண்ட பெயர் பட்டியிலில் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கும் வீர்களின் பெயர்கள் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி போர்த்துக்கல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, குரோஸியா அணியைச் சேர்ந்த லூக்கா மோட்ரீக் மற்றும் எகிப்து அணியைச் சேர்ந்த மொஹமட் சலா ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிறந்த பிபா மகளிர் வீராங்கனைகளின் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல்களில் நோர்வே அணியைச் சேர்ந்த எடா ஹெகர்பெர்க், ஜேர்மனி அணியைச் சேர்ந்த டிசென்ஃபர் மரோஸ்சன் மற்றும் பிரேஸில் அணியைச் சேர்ந்த மர்டா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

அத்துடன் பிபா சிறந்த அணியின் பயற்சியாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் குரோஸியா அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டலிக், பிரான்ஸ் தேசிய அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்ஹாம்ப்ஸ் மற்றும் பிரான்ஸ் முன்னாள் மட்ரிட் பயிற்சியாளரான ஜினேன்டைன் ஜிடேன் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

SHARE