வெளிநாட்டு கைத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

17

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவரை கட்டுநாயக்க பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றையும் மூன்று துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE