அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டன் தூதரக அதிகாரிகள் விஜயம்

34

சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதரகம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

பிரதிஉயர்ஸ்தானிகர் டிம்பேர்ன்ஸ் உட்பட தூதரக அதிகாரிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் அவர்களை துறைமுக நடவடிக்கைகளை கையாளும் நிறுவனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை கையாளும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் பிரிட்டனின் தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE