பொலிஸாரை வீட்டுக்கு கடத்திச் சென்ற இளைஞர்கள்! புத்தளத்தில் நடந்த விநோதம்.!

24

போக்குவரத்தில் ஏற்படும் ஆபத்தினை தடுக்க தயாரிக்கப்பட்டு வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்ட டம்பி பொலிஸ் உருவங்களை சில இளைஞர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

புத்தளத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் வேக மீருடன் பொலிஸ் அதிகாரிகளுடன் சமமாக வைக்கப்பட்ட டம்மி உருவத்தை அங்கிருந்து அகற்றி கொண்டு சென்றுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் குறித்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், ரன்மல்யாய, பிரதேசத்தை சேர்ந்த ரபீக் மொஹமட் சராஜ் என்ற 23 வயதான இளைஞனும், நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த உஷ்னதம்பி வஹப்ஜீதின் என்ற 21 வயதுடைய இளைஞர்களே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதியில் வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கும் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இவ்வாறு டம்பி பொலிஸ் உருவங்கள் வைக்கப்பட்டன. எனினும் குறித்த இளைஞர்கள் இருவரும் திட்டம் போட்டு அதனை வீட்டிக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE