இந்தியப் படகுகள் தொடர்பான வழக்கு தள்ளுபடி

15

எல்லை தாண்டிவந்த இந்திய படகுகளை அரசுடமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி படகு உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் நெடுந்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த மூன்று இந்திய இழுவைப்படகுகளை புதிய கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு கடந்த மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் தமிழகத்திலிருந்து வருகைதந்த குறித்த படகுகளின் உரிமையாளர்கள் மேற்படி தீர்ப்பை இரத்து செய்து மறுபரிசீலனை செய்யுமாறு கோரி யாழ். ஊர்காவற்றை நீதிமன்றில் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்தனர்

இவ்வழக்கு நேற்றைய தினம்  ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உரிமையாளருக்கன தவணை தேவைக்கு அதிகமாகவே நீதிமன்றால் வழங்கப்பட்டிருந்தும் உரிய கால எல்லைக்குள் யாரும் உரிமை கோராதபடியால் மேற்படி படகு அரசுடமையாக்கப்பட்டதை சுட்டிக்கட்டி நீதிவான் இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE