வெளிநாட்டவர்களால் கொல்லப்படும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான தகவல்

28

ஜேர்மனியில் வெளிநாட்டவர்களால் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஜேர்மனியில் 731 கொலைக்குற்றங்களை பொலிசார் பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 83 வழக்குகளில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஜேர்மானியர்கள் என பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி இந்த வழக்குகளில் பெரும்பாலும் வெளிநாட்டவர்களே குற்றவாளிகள் எனவும் சுட்டிக்காட்டும் பொலிசார், அவர்கள் எந்த நாட்டினர் என்பதை அடையாளம் காண்பதில் கோட்டை விட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 62 கொலைக்குற்றங்கள் வெளிநாட்டவர்கள் மீது பதியப்பட்ட நிலையில், 2017 ஆம் ஆண்டு அது பல எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரம் Chemnitz நகரில் ஜேர்மனியின் அகதிகள் தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜேர்மானியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதில் ஈராக் மற்றும் சிரியா புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மட்டுமின்றி Chemnitz நகரில் நடைபெற்ற இனவாதத்திற்கு எதிரான இசை நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதே சம்பவத்தை சுட்டிக்காட்டி சான்ஸ்லர் மெர்க்கல், வெறுப்புணர்வுக்கு எதிராக ஜேர்மானிய மக்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மனியில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை ஆராய்ந்தால், பெரும்பாலும் வெளிநாட்டவர்களே அதில் ஈடுபட்டது தெரியவரும் என கூறும் ஆய்வாளர்கள்,

பெர்லின் நகரில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிற்ஸ்துமஸ் சந்தையில் லொறியை செலுத்தி தாக்குதல் நடத்தியது துனிசிய புகலிடக்கோரிக்கையாளர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE