ஆசிய கிண்ண தொடர்: 6 வேகப்பந்து வீச்சாளர்களுடன் மிரட்டலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

22

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் திகதி முதல் 28-ந் திகதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.

இதற்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, உஸ்மான் கான், முகமது அமிர், ஷஹீன் அப்ரிடி, ஜூனைத் கான் ஆகிய 6 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அணி விபரம் வருமாறு:

சர்ப்ராஸ் அகமது (தலைவர்), பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம், சோயிப் மாலிக், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷதப் கான், முகமது அமிர், ஹசன் அலி, ஜூனைத் கான், உஸ்மான் கான், ஷஹீன் அப்ரிடி.

SHARE