பிரபாசுக்கு திருமண ஏற்பாடுகள் : மணமகள் அனுஷ்காவா?

38
பிரபாசுக்கு திருமண ஏற்பாடுகள் : மணமகள் அனுஷ்காவா?
தெலுங்கு நடிகர் பிரபாசையும், நடிகை அனுஷ்காவையும் இணைத்து நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்தன.
இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் கூறினர். இவர்களை திரையில் பொருத்தமான ஜோடியாகவும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். பாகுபலி படம் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவை அண்ணி என்றே அழைத்தனர். பிரபாசை திருமணம் செய்துகொள்ள 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அனுஷ்காவை மணக்க எல்லா விண்ணப்பங்களையும் அவர் ஒதுக்கிவிட்டார் என்று கூறப்பட்டது. அனுஷ்கா சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி வந்தார்.

ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதாகவும் திருமண தடை நீங்க அவர் பரிகாரங்கள் செய்ததாகவும் பேசினர். அனுஷ்காவுக்கு இப்போது 36 வயது. பிரபாசுக்கு 38 வயது. பிரபாசின் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் ஏற்பாடுகள் செய்து வருவதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மணமகளை முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதனால் தெலுங்கு பட உலகினரும் ரசிகர்களும் மணமகள் யார்? என்ற பரபரப்பான கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். அனுஷ்காவைத்தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் பேச்சு உள்ளது. பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் 3 அல்லது 4 மாதங்களில் அவரது திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

SHARE