கொட்டகலையில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

23

திம்புள்ள – பத்தனை, கொட்டகலை பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பால் வழங்கியமைக்கான கொடுப்பனவுகள் கிடைக்காமையினால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள கொட்டகலை பால்சபைக்கு முன்பாக நேற்று காலை 8 மணி தொடக்கம் 10.45 வரை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் உள்ள தனியார் பால் சபைக்கு மாதாந்தம் குறித்த பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் பால் வழங்கி வருகின்றனர்.

சுமார் ஒரு வருடகாலமாக அந்த மக்களுக்கான பால் வழங்கியதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமையினால் கொட்டகலை பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

”நாங்கள் கால்நடை வளர்ப்பையே நம்பி வாழ்ந்து வருகிறோம். எங்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்து சம்பந்த அதிகரிகளுக்கு பலமுறை அறிவித்துள்ளோம். எனினும் எந்த பயனும் இல்லை.

எமது பிரச்சினைக்குத் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தேர்தல் காலங்களில் கூட எங்களின் வாக்குகளைப் பெற்று சென்றவர்கள் கூட எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதில் தயக்கம் காட்டிவருகின்றனர்.” என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE