உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவைச் சேர்ந்த சவுரப் சவுத்ரிக்கு தங்கம்

14
உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவைச் சேர்ந்த சவுரப் சவுத்ரிக்கு தங்கம்
உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, 52-வது உலக சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சங்வான் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கியது.
செப்டம்பர் 15 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள  இந்த போட்டியில், 18 ஆடவர், 11 மகளிர் அடங்கிய தனிநபர் மற்றும் அணி போட்டிகளும், ஜூனியர் பிரிவில் 15 ஆடவர் மற்றும் 9 மகளிர் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இது போக, கலப்பு அணிகள் பங்கேற்கும் மூன்று போட்டிகளும், ஜூனியர் தடகள வீரர்களுக்கு மூன்று கலப்பு அணிகள் பங்கேற்கும் போட்டிகளும் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ஃபிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். இதே பிரிவில், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன்சிங் சீமா வெண்கலம் வென்றார்.
SHARE