வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் யாழ். அடைக்கல அன்னை (OLR) ஆலயத்திற்கு ரூபா இரண்டு இலட்சத்துக்கு கதிரைகள் கொள்வனவு செய்து வழங்கி வைப்பு

41

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம்
ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ். அடைக்கல அன்னை (OLR)
ஆலயத்திற்கு ரூபா இரண்டு இலட்சத்திற்கு (200,000.00) கதிரைகள்
கொள்வனவு செய்து, 03.09.2018 அன்று வழங்கிவைத்தார்.


யாழ். அடைக்கல அன்னை (OLR) ஆலய பங்குத்தந்தை அருட்பணி அன்ரனி
தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செயலக
நிர்வாக உத்தியோகத்தர் திருமதி வி. பாலசுப்பிரமணியம், யாழ்ப்பாண
பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி மேர்சி சுஜந்தினி, சென்.
ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை அதிபரும் யாழ். அடைக்கல அன்னை ஆலய
மேய்ப்புப்பணி செயலாளருமான திரு. அ. மரியதாசன், யாழ். அடைக்கல
அன்னை ஆலய மேய்ப்புப்பணி குழு நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வலயத்
தலைவர்கள், பங்குமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

SHARE