2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம்

41
2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம்

ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ புதிய ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2018 ஐபோன் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாது என அவர் தெரிவித்தார். பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மெல்லிய பெசல்கள் மற்றும் அதிகளவு ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்ட சாதனங்களில் வழங்கப்படுகின்றன.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தொடர்ந்து வழங்கப்படுவதால், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் 2019-ம் ஆண்டு 500 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்றும், ஆப்பிள் நிறுவனம் டச் ஐடி தொழில்நுட்பத்தை தனது சாதனங்களில் இம்முறை வழங்க அதிக வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்பம் ஐபோன் மாடல்களில் சிறப்பாக வேலை செய்கிறது, மேலும் ஆன்ட்ராய்டு மாடல்களில் சீராக வளர்ந்து வரும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் சோதனையாக இருக்கும் என தெரிவித்தார்.
2019-ம் ஆண்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலில் இன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பத்திற்கான முதல் அப்டேட் ஆக இருக்கும் மிங் கணித்துள்ளாப். முன்னதாக விவோ நிறுவனம் வெளியிட்ட X21 ஸ்மார்ட்போனில் முதல் முறையாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.
SHARE