பிரித்தானியாவில் கடந்த 2003-ல் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நபீல் குர்ஷித், இக்பாக் யூசப் என்ற இரு இளைஞர்கள், இன்னொரு நபருடன் சேர்ந்து 14 வயதான சிறுமியை காட்டுக்குள் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பமான நிலையில் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
ஆனால் குற்றவாளிகள் குறித்து விசாரிக்காத பெற்றோர், முதல் வேலையாக சிறுமியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளனர்.
மூன்று பேரால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 30 வயதாகிறது.
இது குறித்து அப்போதே பொலிசாருக்கு தகவல் தரப்பட நபீல் குர்ஷித், இக்பாக் யூசப் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி முன்னர் கூறுகையில், நான் பலாத்காரம் செய்யப்பட்ட வலியை விட என் பெற்றோர் என்னை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியது தான் அதிக வலியை கொடுத்தது என கூறியிருந்தார்.