கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது

18

மட்டக்களப்பு – வாழைச்சேனை, விபுலானந்தர் வீதியில் கேரள கஞ்சாவுடன் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் சென்ற கார் ஒன்றை நேற்று சோதனையிட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 15 கிலோகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேரில் பெண்ணொருவர் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் வவுனியா, யாழ்ப்பாணம், மதவாச்சி மற்றும் சாலியபுர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

மேலும், சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

SHARE