உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை ஷேர் செய்பவரா நீங்கள்: உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

18

பிரித்தானியாவைச் சேர்ந்த Nicola (33) தனது மகளான Lucy Lewisஇன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் ஷேர் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு முறை புது உடை அணியும்போதும் மகளை புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிடுவார் அவர்.

அவரது குடும்பத்தார் நண்பர்கள் என சுமார் 200 ஃபாலோவர்களைக் கொண்டிருந்தது அவரது ட்விட்டர் கணக்கு.

ஒரு முறை அவரது புகைப்படங்களை முன்பின் தெரியாத ஒரு நபர் ரீட்வீட் செய்வதைக் கண்டார் Nicola.

அவரது கணக்கைப் பார்க்கும்போது அவற்றில் தனது மகளின் ஏராளமான படங்கள் இருந்தன.

அவற்றில் சில ஆபாச படங்களுக்கு நடுவில் பிரசுரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் Nicola.

குறைந்தபட்சம் 80,000 பீடோஃபைல்ஸ் என்று அழைக்கப்படும் குழந்தை ஆபாச படங்களை விரும்பும் நபர்கள் பிரித்தானியாவின் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாக உள்துறைச் செயலரே கூறியிருக்கும் நிலையில் அவர்கள் கையில் குழந்தைகளின் படங்கள் சிக்கினால் என்னவாகும்.

அதிலும் இத்தகைய நபர்களுக்கு பள்ளி யூனிபார்ம் அணிந்திருக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அதேபோல் இரண்டு குழந்தைகளின் தாயான Gemma Hawkins தனது மகனின் புகைப்படம் தவறாக உபயோகிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஒரு புறம் குழந்தைகளின் படங்களை திருடி அவற்றின் தலையை ஒரு நிர்வாணப் படத்தில் பொருத்துவது போன்ற செயல்கள் ஒரு புறம் நடக்க இன்னொரு புறம் பள்ளிக் குழந்தைகளின் புகைப்படங்களில் ஸ்கூல் பேட்ஜில் இருக்கும் முகவரியைத் தெரிந்து கொண்டு அதனால் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

இவை சில உதாரணங்கள்தான், பாதிக்கப்பட்ட இந்த பெற்றோரில் சிலர் இன்ஸ்டாகிராமுக்கு தகவல் கொடுத்து தங்கள் கணக்கை அகற்ற கோரியிருக்கிறார்கள், சிலர் தங்கள் சமூக ஊடக கணக்குகளை மூடிவிட்டார்கள்.

என்றாலும் ஏற்கனவே கயவர்கள் கையில் சிக்கிய படங்களால் என்றுமே பிள்ளைகளுக்கு ஆபத்துதான், எனவே பெற்றோர்கள் படங்களை ஷேர் செய்யும் விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.

SHARE