கறிற்றாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம்

25
-மன்னார் நகர் நிருபர்-
கறிற்றாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை(6) காலை 10 மணியளவில் மன்னார் வாழ்வுதயம் பொதுமண்டபத்தில் இடம் பெற்றது.
சர்வமத ஒன்றிய அரச ஊழியர்கள், மற்றும்  சமயத் தலைவர்களுக்கான ஆலோசனைஇடம் பெற்றது.   வாழ்வுதய சர்வமத செயற்பாடுகளின் இலக்குக் கிராமங்களான அளவக்கை, செம்மண்தீவு, வட்டக்கண்டல், ஆண்டாங்குளம், அடம்பன் ஆகிய கிராமங்களில் இருந்து கிராம அலுவலர்கள்,சமயத் தலைவர்கள், கலாச்சார உத்தியோகஸ்தர்கள் இவ்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் அடையப்பட்ட விளைவுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும், ஆலோசனையும் இடம் பெற்றது.
இத் திட்டமிடலில் சர்வமத சமய விழாக்களை சிறப்பிப்பதற்கான நிகழ்வுகள் தொடர்பாகவும், அரச ஊழியர்கள் மற்றும் சமயத் தலைவர்களுக்கான உறவுப்பால நிகழ்வுகள் தொடர்பாகவும், கலை கலாச்சார நிகழ்வுகள், கண்காட்சி நிகழ்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம் பெற்றது.
 இவ் நிகழ்வில் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமை உரையினை நிகழ்த்தி இவ்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சர்வமத செயற்றிட்ட இணைப்பாளர் .நீ.றெண்சன் அவர்களினால் நடைமுறையிலுள்ள செயற்திட்டம் தொடர்பான விளக்கத்தினை தெளிவுபடுத்தியதுடன் திட்டகண்காணிப்பு அலுவலர்.ச.யேசுதாசன் அவர்களினால் திட்டங்களை அமுல்படுத்துதல், அமுலில் உள்ள திட்டங்களை வினைத்திறன் மிக்கதாக நடாத்துவதற்கு அரச ஊழியர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புத் தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த நிகழ்வின் மூலம் சர்வமதச் செயற்பாடுகள் கிராம மட்டத்தில் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த ஏதுவாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
SHARE