ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

109

 

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DSC_3031-1024x680 141202151600_maithiripalasirisenapublic_rallycolombo_624x351_bbc_nocredit (1) 201411200337

வேட்பாளர்களின் பிரச்சார சுவரொட்டிகள், பதாதைகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதே வேளை தேர்தல் பிரச்சார காரியாலயம் 6 ஆம் திகதியுடன் நீக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக விநியோகிக்கும் விசேட தினமாக இன்றை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தற்போதும் 90 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகித்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் தங்களுக்கான வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், 8 ஆம் திகதிக்கு முன்னதாக தங்களின் பிரதேச தபால் நிலையங்களுக்கு சென்று அதனை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேநேரம் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டிருந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுக்கள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளன.

பொதுநலவாய ஒன்றியம் உட்பட பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகளை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE