இலவச வைத்திய முகாம் 

6
சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த இலவச வைத்திய முகாம் ஒன்று இந்த மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக் கிழமை தெஹியத்தகண்டி தேசிய பாடசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுமார் 1500 நோயாளர்கள் சிகிச்சை பெற்றனர்.அவர்கள் அனைவருக்கும் இலவசமாக  மருந்துகள் வழங்கப்பட்டதோடு 700 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு,இரண்டாயிரம் தென்னங்கன்றுகளும் 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் 20 நீர்த்தாங்கிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.பிரதி அமைச்சர் பைசல் பயனாளிகளுக்கு மேற்படி பொருட்களை வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.
[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]
SHARE