சீமான் குறித்து பிரபாகரன் கேட்ட ஒரு கேள்வி

20

பேசிக்கொண்டு இருக்கும் போது “சீமான் யார்? என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனேன் என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

“ஈழத் தமிழரின் வாழ்க்கை முறையை திரைப்படமாக இயக்கித் தாருங்கள்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரபாகரனை சந்தித்தபோது, ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக இயக்குவது குறித்து என்னிடம் கேட்டார். நான் அந்த சமயத்தில் தமிழில் முன்னணி இயக்குநராக இருந்த ஒருவரின் பெயரை அவரிடம் சிபாரிசு செய்தேன்.

பிரபாகரன் மறுத்துவிட்டார். நீங்கள்தான் இயக்க வேண்டும். எங்கள் மக்களின் வலிகளை திரைப்பட ஆவணமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு, என் மகன், மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய இரண்டு கடமைகள் இருக்கின்றன. அதை முடித்துவிட்டு இலங்கைக்கே வந்து திரைப்படத்தை இயக்குகிறேன் என்று நான் பிரபாகரனிடம் தெரிவித்தேன்.

இதை கேட்டு சிரித்த பிரபாகரன், “ஈழப் பிள்ளைகளுக்கு திரைப்பட இயக்கத்தைக் கற்றுக்கொடுங்கள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது, ‘சீமான் யார்?’ என்று விசாரித்தார். நான் அதிர்ந்துவிட்டேன்.

உடனே தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களைப் பற்றி சீமான் பேசிய பத்திரிகைச் செய்திகளை வைத்தார் பொட்டு அம்மான்.

‘தமிழின மற்றும் மொழி ஆளுமையும் கொண்டவன்’ என்று சீமான் குறித்து பிரபாகரனிடம் சொன்னேன். பிறகுதான் சீமானை இலங்கைக்கே வரவழைத்துப் பார்த்தார் பிரபாகரன் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

SHARE