ஈக்வடார் நாட்டில் நிலநடுக்கம்

28
ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
ஈக்வடார் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார்மையம் கூறியுள்ளது. தலைநகர் குவைட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் 650க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
SHARE