பூசணியில் இவ்வளவு நன்மைகளா?

20

பூசணியானது அதிகளவில் வைட்டமின்களைக் கொண்டது, இருப்பினும் அதன் கலோரிப் பெறுமானம் மிகக் குறைவு.

எனினும் பீட்டாக் கரோட்டின் எனப்படும் அன்ரியொக்சிடனை அதிகளவில் கொண்டுள்ளது.

இவ் பீட்டாக் கரோட்டினே பூசணிக்குரிய செம்மஞ்சள் நிறத்தைக் கொடுக்கின்றது, அதேநேரம் இது புற்று நோய்க்கெதிராகவும் செயற்படக்கூடியது எனவும் சொல்லப்படுகின்றது.

2016 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்று இவ் பீட்டாக் கரோட்டினானது நோய் அபாயங்களை பாரியளவில் குறைப்பதாக வெளிப்படுத்தியிருந்தது.

பீட்டாக் கரோட்டினானது வைட்டமின் – ஏ ஆக மாற்றப்பட்டு பார்வைத் தொழிற்பாடு, இனப்பெருக்கத் தொகுதியின் தொழிற்பாடு, நோயெதிர்ப்புத் தொகுதியின் தொழிற்பாடுகளை விருத்திசெய்கின்றது.

மேலும் இவை சிறுநீர்ப் பை, நுரையீரல், இதயம் போன்றன சிறப்பாக தொழிற்பட உதவுகின்றன எனவும் சொல்லப்படுகின்றது.

அதேபோல இவற்றின் விதைகள் மற்றும் பூக்களும் ஊட்டச்சத்து நன்மைகளைத் தரக்கூடியன என தெருவிக்கப்படுகிறது.

SHARE