விசுவமடு மேற்கு பகுதியில் நடந்துள்ள மோசமான சம்பவம்

33

முல்லைத்தீவு – விசுவமடு மேற்கு பகுதியில் வசிக்கும் ஆசிரியரொருவரின் வீட்டிலிருந்து 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அந்த ஆசிரியர் வெளியூர் சென்றுள்ள நிலையில், அவருடைய மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே சென்று அடையாளம் தெரியாதோர் நகைகளை திருடியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE