விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மர்ம ஒளிவட்டம்

கடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனாலும் ஒரு விஞ்ஞானிகள் குழுவொன்றிற்கு இக் கிரகணம் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது.

காரணம், இதற்கு ஒரு வாரம் முன்னாடியே இவர்கள் அது எவ்வாறிருக்கப்போகின்றது என்பது பற்றிய ஒரு மாதிரிப் படத்தை வெளியிட்டிருந்தனர்.

அதற்கென ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் பல சூப்பர் கம்பியூட்டர்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் செலவழித்து இந்த மாதிரிப் படத்தை தயாரித்திருந்தனர்.

இதில் முக்கியமாக Alfvén அலைகள் தொடர்பான தகவல்களும் காட்டப்பட்டிருந்தன.

இவ் அலைகளே சூரியனின் வெளிப்பகுதி வெப்பநிலையை ஆனது அதன் உட் பகுதி வெப்பநிலையிலும் பார்க்க அதிகமாகக் இருப்பதற்கு காரணம்.

இதில் விஞ்ஞானிகளுக்கு மிக ஆச்சரியமான விடயம் தங்களின் மாதிரியைப் போன்றே கிரகணமும் காட்சியளித்திருந்தமை.

இவர்களது மாதிரியில் சில சிறிய கட்டமைப்புக்கள் இழக்கப்பட்டிருப்பினும், அது மூன்று பெரிய பூவிதழ் வடிவ கட்டமைப்புக்களை சரியான இடத்தில் உள்ளடக்கியிருந்தது.

எனவே இத் தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்தி வருங்கால கிரகணங்களின் சிறப்பான மாதிரிகளை வெளியிடமுடியும் என்பது அவர்களது நம்பிக்கை.

About Thinappuyal News