வடக்குப் பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்

 

Rajaniயுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, மற்றும் முன்னர் யுத்தத்தினால் சீரழிந்த பகுதிகள் யாவும் பெரிய அளவில் அபிவிருத்தியை கண்டுவரும் அதேவேளை, வடபகுதிப் பெண்கள் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுடன் அனுசரித்துப் போவதற்கும் மற்றும் சமூத்தில் கண்ணியத்துடனும் மற்றும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு அவர்களுக்கு உரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் இன்னமும் போராடி வருகிறார்கள். வருந்தத்தக்க வகையில் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. தீவிர வடிவத்திலான வன்முறைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டாலும் குறைந்த வடிவத்திலான பாலியல் வன்முறைகள் இன்னமும் மறைக்கப்பட்டுள்ளதுடன் வெகு அபூர்வமாகவே அதற்கு தீர்வும் காணப்படுகிறது.

வடக்கிலுள்ள பெண்களின் கூற்றுப்படி- உறவுகளிடையே அனுமதிக்கப்படாத பாலியல் வன்புணர்வு, திருமண பந்தத்தின் மூலம் ஏற்படும் பாலியல் வல்லுறவு, மற்றும் வேறு வடிவங்களினாலான உள்வீட்டு வன்முறைகள் வடக்கில் நிலவிவருவதாக கூறப்படுகிறது. எனினும் பெண்கள் மீதான அடக்குமுறை காரணமாக, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த வன்முறைகளைப் பற்றி அவர்களின் வீட்டுக் கட்டுக்காவலை கடந்து மிக அரிதாகவே வெளியில் பேசப்படுகிறது. எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அது வெளிப்படையாகவே மோசமாக இருந்தது, ஆனால்; குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை முன்னெடுக்கப்பட்டதின் காரணமாக பின்னர் அது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

வடக்கிலுள்ள பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் கூறுவதன்படி, சமூக ஊடகங்கள் மற்றும் பெண்கள் மிகவும் வெளிப்படைத் தன்மையாக நடப்பது போன்ற காரணங்களால் இன்று வடக்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தன்மை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும் பாலியல் கல்வி என்று வரும்போது, இன்றும்கூட தமிழ்ச் சமூகம் அதற்கு தயக்கம் காட்டுவது மட்டுமன்றி; பாலுறவு தீண்டத்தகாத ஒரு விடயம் எனக்கருதி தங்கள் குழந்தைகளுடன வெளிப்படையான உரையாடலை மேற்கொள்ளவும் அஞ்சுகிறார்கள்.ஆனால் உண்மை என்னவென்றால் இணையத் தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வடக்கிலுள்ள இளைஞர்கள் மிகவும் சுதந்திரமாக சகலதையும் அணுகுவதுடன்,பாலியல் விடயங்கள் பற்றிக்கூட மிகவும் அதிகமாக தெரிந்து வைத்துள்ளார்கள்.

அதன் விளைவாக பிள்ளைகள் தாங்களாகவே அவற்றில் அனுபவம்பெற முயற்சி செய்கிறார்கள் மற்றும் சமூக நடைமுறைகள் காரணமாக அவர்கள் தங்கள் பாலியல் ஆவல்களை, தமிழ் சமூகத்திலுள்ள தங்கள் பெற்றோர்களிடமிருந்து அல்லாமல் முற்றிலும் வெளியாட்கள் மூலமாக தெரிந்துகொள்ள முயற்சிசெய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் கூற்றின்படி, அநேக தமிழ் இளம்பெண்கள் தங்களிடையே உள்ள இராணுவ ஆட்களுடன் தொடர்பு கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம். அதேவேளை அதற்கான மற்றொரு காரணம், இந்தப் பெண்கள், ஆண்கள் சொல்வதை தட்டக்கூடாது, அவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்கிற எண்ணத்துடனேயே வளர்க்கப்பட்டு வருவதால், அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் இந்த ஆண்கள் பாலியல் முயற்சிகள் முன்னெடுக்க முயலும் போது அவர்களை எதிர்ப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ இந்தப் பெண்களுக்கு கடினமாக உள்ளது. இந்த இளம் பெண்கள் தங்கள் ஆசையையோ அல்லது மனப்புளுக்கத்தையோ பற்றி தெரிவிப்பதற்கான இடைவெளியையோ அல்லது சந்தர்ப்பத்தையோ சமூகம் அவர்களுக்கு வழங்குவதில்லை. சில பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தின் கடைசி நாட்கள் வரை தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறியாதவர்களாகவே உள்ளார்கள்.women -kilinochchi

கல்வித் துறையில் பாலியல் தொல்லைகள் அல்லது பாலியல் வன்முறைகள் இடம் பெறுவது அசாதாரணமான ஒரு விடயமல்ல. ஆனால் பெண்கள் ஆண்களின் நடத்தைகளை சாதாரணமாக எற்றுக்கொள்வதுடன் வெகுஅரிதாகவே அதைப்பற்றி புகார் தெரிவிக்கிறார்கள், அல்லது தாங்கள் அவமானத்துக்கு ஆளாவோம் என அஞ்சி அதைப்பற்றி பேசாமலே விட்டுவிடுகிறார்கள். எனினும் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பெண் தனது மேலதிகாரியின் பாலியல் தொல்லைகளைப் பற்றி பேசுவதற்கு துணிவுபெற்றுள்ளார், பெண்கள் உரிமைகள் ஆர்வலர்களின் கூற்றுப்படி அந்த மேலதிகாரி இதற்கு முன் மற்றைய பெண்கள் பலருக்கும் இவ்வாறு தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் யாரும் அதைப்பற்றி முறைப்பாடு செய்யவில்லை. அந்தப் பெண் இந்த அதிகாரிக்கு எதிராக கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் இத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது நிச்சயமில்லை.

இத்தகைய சம்பவங்கள் முறையிடப்பட்டும் அவற்றுக்குத் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால், மற்றும் உயர் அமைப்புகள் பெண்களுக்கு ஆதரவு வழங்காவிட்டால், அதன் விளைவாக பெண்கள் பின்வாங்கி தங்கள் ஓடுகளுக்குள்ளேயே பதுங்கிக் கொள்ள முயல்வார்கள், மற்றும் துணிவாக ஓரடி முன்வைத்த பெண்கள் பத்தடி பின்னே போய்விடுவார்கள் என்று பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

வடக்கில் பணியாற்றும் டி.காயத்திரி மற்றும் ரஜனி சந்திரசேகரம் ஆகிய இரு பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் சண்டே லீடருடன் பேசுகையில், அர்த்தமுள்ள நல்லிணக்கத்தையே பெண்கள் விரும்புவார்கள் என்றார்கள். போருக்குப்பின் திரும்பி வந்த முஸ்லிம் மற்றும் தமிழ் பெண்களுக்கு தாங்கள் நல்ல முறையில் வரவேற்கப் படுகிறோம் என்கிற உணர்ச்சியை வழங்க முடியவில்லை.

கடந்த காலம் என்பது கடந்துபோன காலமே மற்றும் கடந்த காத்தில் என்ன நடந்தது என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும், என்றாலும் கடந்த காலத்தை மறந்துவிடவும் கூடாது, மன்னிக்க விருப்பம் உள்ளவர்களாக நாம் முன்னேறிச் செல்லவேண்டும். நாங்கள் கடந்த காலத்தை மீண்டும் உருவாக்கக்கூடாது, மாறாக கடந்த காலத்தை புதைத்துவிட்டு அதன்மேல் சகல சமூகத்தினரதும் உரிமைகள் சமமாகப் பாதுகாக்கப் படக்கூடிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும். என அவர்கள் சொன்னார்கள்.

பெண்கள் என்ற வகையில் வீட்டிலோ அல்லது சமூகத்திலோ வன்முறைகள் இடம் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை,மற்றும் வடக்கில் உள்ள பெண்கள்கூட உறவுகளில் சமத்துவம் வேண்டும் என விரும்புகிறார்கள.

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப்பற்றி பேசுகையில், வன்முறைகள் எண்ணிக்கையில் மட்டும் அதிகரிக்கவில்லை ஆனால் அதேபோல அதன் மிருகத்தனமான நடவடிக்கைகளிலும் உயர்ந்துள்ளது என  பெண்கள் உணருகிறார்கள் என்றார்கள். யாழ்ப்பாணத்தில்  லோகராணி என்ற  பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்  கொடுமைக்கு உட்படுத்தி, அவளைக்  கோரமாகக் கொலை  செய்து, அவளது உடலை ஒரு   கோவிலின் அருகில் வீசியெறிந்துள்ள சம்பவத்தைக்  கேள்விப்பட்டு தாங்கள் ஆழ்ந்த துயரமடைந்ததாக காயத்திரி  சொன்னார். ‘சில காலங்களுக்கு முன்பு இடம் பெற்ற கிறீஸ் மனிதன் சம்பவத்தைப் போல இதுவும்  தொடரக்கூடும் என நாங்கள் பயந்திருந்தோம், அப்போது  பெண்கள் தங்கள்  சொந்த வீடுகளுக்குள் இருக்கவும் மற்றும் தனியாக தங்கள் வீடுகளைவிட்டு  வெளியேறவும் அஞ்சி நடுங்கினார்கள்.  லோகராணி  கொலை  செய்யப்பட்டு அவளது உடல் கோவில் அருகே வீசப்பட்டிருந்த போது அதிக பதற்றம் நிலவியது. எனினும் இன்றுவரை அதற்கு எந்தப் பதிலுமில்லை,என்றாலும்கூட இதுவரை ஒரு சந்தேக நபர்கூட கைது செய்யப்படவில்லை’.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு வடக்கில் வன்முறைwomen kilinochi-1கள் அதிரித்திருப்பதாக இங்குள்ள பெண்கள் உணருகிறார்கள். அதில் பெரும்பாலான வன்முறைகள் பெண்களுக்கு எதிரானவைகளாகவே அறிவிக்கப் பட்டுள்ளன, அதன் முதல் பிரதிபலிப்பாக வெளிப்படுவது இராணுவத்தின்மீது பழிபோடுதல். எனினும் இதுபற்றிய காயத்திரியின் அவதானிப்பு: ‘ இந்த எந்த சம்பவத்திலாவது அவர்கள் தொடர்பு பட்டிருக்கவில்லை என நான் சொல்லவில்லை, ஆனால் இந்த எல்லா குற்றங்களையும் இராணுவத்தினர்தான் செய்தார்கள் எனக் கூறுவது நியாயமான செயல் அல்ல. வடக்கிலுள்ள நாங்கள் எங்கள் சமூகத்திற்குள்ளேயே குற்றவாளியை தேடுவதற்கு அல்லது பழியை ஏற்றுக்கொள்ளுவதற்கு அதிக தயக்கம் காட்டுகிறோம்’ என்பதாக இருந்தது.

ரஜனியின் கூற்றுப்படி, இதன் துயரமான பகுதி என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்பட்டால், கவனத்துக்கு வரும் விடயம் வன்முறை அங்கு இடம்பெறவில்லை என்றே. ‘இதில் வஞ்சனை என்னவென்றால் வன்முறை இடம்பெற்றுள்ளது என்பதை கவனத்துக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவரின்  நடத்தை அல்லது அவரது மனநிலை என்பனவற்றைப் பற்றியே ஊடகங்கள் கூட சவால் விடுகின்றன. கடந்த காலங்களில் பூனகரியான், விஸ்வமடு, மன்னார், புங்குடுதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களில் நடந்ததாக அறிவிக்கப்பட்ட சம்பவங்களில் இராணுவ நபர்கள் அல்லது ஆயுதக் குழுக்கள் தொடர்பு பட்டிருப்பதாக கண்டறியப் பட்டிருந்தது’.  இங்குள்ளவர்கள் போதுமானளவு ஆயுதப் போராட்டங்களை கண்டு சலித்துவிட்டதால் யாரும் இங்கு இராணுவமயமாக்கலை விரும்பவில்லை என ரஜனி சொல்கிறார்.

 வடக்கில் இராணுவம் அதிகம் பலம் பொருந்தியதாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று என்னவென்றால், கொள்கைகள் மக்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பதுதான் என அவர் சுட்டிக்காட்டினார்.’ காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதில்லை, பெரும்பாலான காவல்துறையினர் சிங்களவர்களாக இருப்பதால் அங்கு ஒரு தொடர்பாடல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. எனினும் இராணுவம் தொடர்ச்சியாக மக்கள் இடையே இருந்து வருவதால் மக்கள் இராணுவத்துடன் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்’ என அவர் சொன்னார்.

வடபகுதியில் உள்ள பெண்கள் எண்ணுவது என்னவென்றால், சம்பவங்கள் நடக்கும்போது அதில் இராணுவம் தொடர்பு பட்டிருந்தால் குற்றவாளிகள்மீது குற்றம் சுமத்த காவல்துறையினர் தயக்கம் காட்டுவதுடன் முழுச் சம்பவமும் மூடி மறைக்கப்பட்டு விடுகிறது என்று. வடபகுதிப் பெண்களின் மனக்குறைகள் பல கருத்தரங்குகள் மற்றும் ஊடகங்கள் என்பனவற்றில் வெளிச்சம் போட்டு காண்பிக்கப் பட்டுள்ளன ஆனாலும் அவர்கள் எண்ணுவது என்னவென்றால் இத்தகைய கவனயீர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட இந்தக் குற்றங்கள் இன்னமும் தொடர்வதாகவே. ‘இந்தக் குற்றங்களுக்கான காரணங்கள் என்னவென்று நாங்கள் கண்டு பிடிக்க முயற்சி செய்து எங்களுக்கு என்ன வேண்டியுள்ளது என்று அதுபற்றிப்; பேசலாம், ஆனால் பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த குற்றங்கள் நின்று விடுமா. சட்ட அமலாக்கப் பொறிமுறைக்கு இந்தக் குற்றங்களுக்கான காரணங்கள் என்னவென்று கண்டுபிடித்து அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய ஒரு கடமை உள்ளது.

சில வழக்குகளில் உண்மையில் சரியான ஆள்தான் கைது செய்யப்பட்டுள்ளாரா மற்றும் உணமையான குற்றவாளி இன்னமும் வெளியில்தான் நடமாடுகிறாரா என்கிற நிச்சயமற்ற தன்மை எங்களிடம் ஏற்படுகிறது’ என்று ரஜனி சொன்னார்.  இந்தச் சம்பவங்கள் பற்றி அறிவிப்பதில் உள்ளுர் ஊடகங்களுக்கும் கூட அதிகம் பொறுப்பு இருக்க வேண்டும், மற்றும் தாங்கள் வெளியிடுவது உண்மைதானா என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என ரஜனி மற்றும் காயத்திரி ஆகிய இருவருமே எண்ணுகிறார்கள். இது பற்றிய ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை பற்றிக் கூறும்போது காயத்திரி தெரிவித்தது,’ ஒக்ரோபரில்  உள்ளுர் ஊடகம் இரண்டு கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி அறிவித்திருந்தது, இறுதியில் அவை பொய்யான அறிக்கைகளாக மாறியிருந்தன. முதலில் நாங்கள் கூட இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்திருந்தோம், ஆனால் இந்தக் கதை பற்றி அறிந்து கொள்ள நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டபோது அவை முற்றிலும் பொய்யான ஆதாரமற்ற  கதைகள் என்பதை கண்டுபிடித்தோம். எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு இருந்தபோது இத்தகைய குற்றங்கள் ஒருபோதும் நடக்கவில்லை, ஆனால் இப்பொழுது இது இராணுவத்தால் நடத்தப்படுகிறது என உலகத்துக்குச் சித்தரித்துக் காட்ட சில குறிப்பிட்ட ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. எனவே ஊடகமானது சில குறிப்பிட்ட கட்சியினரது நிகழ்ச்சித் திட்டங்களை திருப்தி செய்வதற்காக பொய்யான கதைகளை வெளியிடாமல், அதிக பொறுப்புடன் நடந்து உண்மைகளை மட்டுமே அறிவிக்க வேண்டும்’ என்று.

இதற்கிடையில் வடக்கை சோந்த மற்றொரு பெண்ணுரிமை ஆர்வலரான சிறீன் சரூர் சண்டே லீடருக்கு தெரிவித்தது, போருக்குப்பின் அரசாங்கத்தின் கொள்கையான அபிவிருத்தி ஊடாக சமாதானம் என்பது பெண்களுக்கு (பெரும்பாலும் போரினால் இடம் பெயர்ந்து சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களுக்கு) அதிக இடர்களை ஏற்படுத்தியுள்ளது .’இன்று எமது சமூகத்தில் நிலவிவரும் தண்டனை விலக்கு கலாச்சாரம் மற்றும் அரச கட்டமைப்புகளான விசேடமாக நீதித்துறை மற்றும் காவல்துறை என்பனவற்றின்  பொருத்தமற்ற பதில்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதில் கஷ்டத்தை எற்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இராணுவ மயமாக்கலும் சிவில் நிருவாகத்தில் அதன் தலையீடும்.

இயற்கை வளங்களை முக்கியமாக நிலம், நீர்வழிகள், கடல், மற்றும் கரையோரப் பகுதிகள் என்பனவற்றை இராணுவ இயந்திரம் கட்டுப்படுத்துவது, திரும்பி வரும் பெண்கள் அவர்களின் மரபு வழியான வாழ்வாதாரங்களை மீளத் தொடங்குவதற்கு பெரிய தடையாக உள்ளது, இதன் விளைவாக அவர்கள் பாதுகாப்பின்மை மற்றும் எழ்மை போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். முன்னாள் யுத்த வலயப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட் கட்டமைப்பு அபிவிருத்திகளை நீங்கள் பார்த்தால், அவை வெளியாட்களின் வருகையை விசேடமாக சுற்றுலா முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை வடக்கிற்கு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே செயற்படுத்தப் படுகின்றன.

போரினால் அதிகம் சேதத்துக்கு ஆளாகிய உள்ளுர் பெண்கள் இதனால் தங்களின் பொருளாhர வளங்களில் அதிகமானவற்றை இழந்துள்ளார்கள், வடக்கிற்கு வெளியில் இருந்து வருபவர்களுடன் போட்டிபோடும் திறமை இவர்களிடம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. ஆகையால் இந்தப் பெண்கள் இழிவான வேலை, குறைவானசம்பளம் தரும் வேலை,சட்டப்படி அங்கீகரிக்கப்படாத ஆபத்தான வேலை என்பனவற்றை செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள். தவிரவும் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் ஆண்துணை அவர்களுக்கு இனிமேலும் இல்லாதபடியால்,போரினால் தங்களுக்கு சுமைகளாக்கப்பட்ட உடல் ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களையும் தங்கள் சொந்த தோள்களில் சுமக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்’ என்று அவர் மேலும் சொன்னார்.

குற்றவாளிளை தண்டிக்க வேண்டிய அரச கட்டமைப்புகள் தோல்வியடைந்திருப்பதாலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் சொன்னார். ஏனைய காரணங்களில் எங்கள் நாட்டின் வன்முறை நிறைந்த கடந்த காலம் மற்றும் எங்கள் சமூகங்கள் கூட்டாக அனுபவித்த அதிர்ச்சி என்பனவும் சேர்ந்துள்ளன, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அதிர்ச்சியை குணப்படுத்துவதற்கும்; மற்றும் மனநல பாதுகாப்பை விருத்தி செய்வதற்கும் இந்த நாட்டின் போருக்குப் பிந்தைய அவிவிருத்தியில் இடம் ஒதுக்கப்படவில்லை. உண்மையில் பெண்களுக்கு தங்களைவிட்டு பிரிந்துபோன தங்களது பிரியப்பட்டவர்களுக்காக துக்கம் அனுட்டிக்கக்கூட அனுமதி வழங்கப்படவில்லை. மக்கள் அதிகம் துன்பங்களை அனுபவித்ததுடன் இத்தகைய மிருகத்தனமான அட்டூழியங்களுக்கும் சாட்சிகளாக இருக்கிறார்கள். இந்த வன்முறை தொடர்பான ஆழமான அதிர்ச்சிக்கு தீர்வு தேவை மற்றும் உண்மையை சொல்லவும், நீதியை தேடவும் மற்றும் இழப்பீடு பெறுவதற்குமான இடம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

போரின் விளைவாக பல வீட்டுடமைகளில் குடும்பத் தலைமையை women-vanniவேலை வாய்ப்புகள் குறைவான நிலையிலும் பெண்களே எற்றுள்ளார்கள், அதனால் இந்தப் பெண்களில் பலர் அதிகாரத்திலுள்ள ஆண்களுக்கு இரையாகிறார்கள். கடுமையான இராணுவமயமான ஒரு சூழலில் இந்தப் பெண்கள் தங்கள் முழுக்குடும்பமும் வாழ்க்கை நடத்துவதற்கு தேவையானவற்றை சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள், அத்தோடு காணாமற்போன மற்றும் தடுப்புக் காவலில் உள்ள தங்கள் துணைவரை தேட வேண்டியுள்ள அதேவேளை, தங்களுக்கான நீதியையும் கோருகிறார்கள், மற்றும் ஒரு குறிப்பிட்ட குணவியல்புகளை கொண்ட அதிகாரிகளின் ஆதிக்கத்திலுள்ள மறுவாழ்வு உதவிகளையும் பெறவேண்டிய நிலையிலுள்ளார்கள். இவைகள் அவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்கள் மற்றும் இவை இந்தப் பெண்களை பலவீனமானவர்களாக ஆக்குவதுடன் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகவேண்டிய நிலைக்கும் அவர்களை தள்ளிவிடுகிறது. சொந்த இடங்களுக்கு திரும்பும் பெண்கள் ஏராளமான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது, விசேடமாக  அவர்கள் சொந்த கிராமங்களை விட்டு தொலைவிலுள்ள வேறு இடங்களில் குடியமர்த்தப்படும் பொழுது (ஏனெனில் அவர்கள் நிலங்கள் இராணுவத்தால் எடுக்கப்பட்டு அல்லது அபிவிருத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது) அவர்கள் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியள்ளது. அவர்களின் நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டு இயற்கையான வாழ்க்கைமுறை மற்றும் சமூக வலையமைப்பு என்பன அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகிறது.

நிலம் மற்றும் இயற்கை வளங்கள் இராணுவ மயாக்கலுக்குள் சிக்கிவிட்டதால் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அநேமான பெண்கள் மரபுரீதியான வழ்வாதார தொழில்களில் ஈடுபட முடியாததால் கேவலமான தொழில்களை செய்யும் நிலையை அடைகிறார்கள். தவிரவும் இந்தப் பெண்கள் அனைவருமே பாரிய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பட்டுள்ளார்கள் நீதியை தேடுவதற்கான அவர்களுக்குரிய பாதைகள் இராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ள அதேவேளை  சிலர் கண்காணிக்கவும் படுகின்றனர்’ என்றார் சிறீன்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வனமுறையை அறிவிப்பதில் மற்றொரு தடையாக இருப்பது – விசேடமாக உறவு முறையில் தடை செய்யப்பட்ட பாலியல் சேர்க்கைகள், இருப்பினும் அத்தகைய துஷ்பிரயோங்களை சில பெண்கள்  சில உரிமைக் குழுக்களிடம் முறையிடத்தான் செய்கிறார்கள், அத்தகைய வன்முறைகளை வெளிப்படையாக பேசுவதற்கு அல்லது சட்ட அமலாக்கல் அதிகாரிகளிடம் முறையிடுவதற்கு தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்கிற காரணத்தால் தயக்கம் காட்டுகிறார்கள். மண்டைதீவில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் நாலு வயதான பிள்ளை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது, அந்தக் குற்றம்  பாதிக்கப்பட்ட பிள்ளையின் பேரனால்தான் நடத்தப்பட்டுள்ளது என்பது தனக்கு நிச்சயம் என இறந்த பிள்ளையின் தாய் கூறுகிறார். எனினும் சட்டம் இன்னும் அவரை தண்டிக்க வேண்டியுள்ளது.

பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்காக சமூகம் அவர்கள்மீது பழி சுமத்தும்போது பெண்களுக்கு அதை தாங்குவது மிகவும் கடினமாக உள்ளது. ஒரு சிறு பெண் தற்கொலை செய்தாலோ அல்லது கற்பழிக்கப்பட்டாலோ சமுதாயம் பாதிக்கப்பட்டவளின் தாய்மீதுதான் பழி சொல்கிறது, இது அவளுக்கு ஒரு பாரிய எதிர்த்தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வடக்கில் தற்கொலைகள் குறிப்பாக காதல் தோல்விகளுடன் தொடர்புடையவை அதிகரித்துச் செல்வதாக ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த இளையோர்களுக்கு உறவுகளை சமாளிக்க தெரியவில்லை அல்லது இயலவில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள். இவ்வாறான அநேக சந்தர்ப்பங்களில் தாய் மீதுதான் அதுவும் ஒரு வேலைசெய்யும் தாயாக இருக்கும் பட்சத்தில் அவர்மீதுதான் சமூகம் குற்றம் சொலகிறது. வடபகுதியில் உள்ள பெண்களின் நலன்களை பொறுத்தமட்டில்  பெண்களுக்கான சம உரிமை மற்றும் மரியாதை என்பன மிகவும் முக்கியமானவை என இந்த ஆர்வலர்கள் நினைக்கிறார்கள்.

இந்தப் பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அவற்றை தீர்த்து வைக்க வேண்டும், காவல் துறையினருடன் நல்ல மற்றும் நம்பிக்கையான உறவு இருக்கவேண்டியது அவசியம். வடக்கிலுள்ள பெண்களுக்கு யுத்தம் முடிவடைந்து விட்டபோதிலும்,சமத்துவத்தை அடைவதற்கும் மற்றும் சுதந்திரமாக வாழவேண்டிய உரிமைகளை பெறுவதற்காகவும் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு இன்னமும் வெற்றி கிட்டவில்லை, மற்றும் அவர்கள் கேட்பதெல்லாம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தையே.

About Thinappuyal News