காட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

16

பொலன்னறுவை – வெலிகந்தை, குடாஓயா பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நபரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சடலத்தை இன்று காலை தாம் மீட்டதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அசேலபுர பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான என்.பி.பியரத்ன என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர், மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக அவரின் மகன் வெலிகந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குடாஓயா காட்டில் நண்பர்களுடன் இணைந்து தந்தையை தேடிய போது சடலம் கிடைத்துள்ளது.

உயிரிழந்தவரின் செல்போன் மற்றும் காலணிகள் சடலத்திற்கு அருகில் கிடந்துள்ளன. சடலத்தின் கண்ணுக்கு அருகில் இரத்தம் காணப்படுவதால், மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவேவேளை, சம்பவம் குறித்து வெலிகந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE