மனித மண்டையோடுகள் தொடர்பில் வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்

51

மனிதர்களின் தலைக்குள் சுரங்கங்கள் போன்ற அமைப்பு உள்ளதென்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால் இது தற்போது மருத்துவ ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை.

ஆம், எலிகள் மற்றும் மனிதர்களின் தலைப்பகுதியினுள் மூளையினையும், மண்டையோட்டு என்பு மச்சைகளையும் இணைக்கும் கால்வாய்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை மூளைக்கான நோயெதிர்ப்புக் கலங்களை வழங்கும் பாதை என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இதன் காரணமாக மூளை தாக்கத்திற்கு உள்ளாகும்போது இவ் நோயெதிர்ப்புக் கலங்கள் என்பு மச்சையிலிருந்து நேரடியாக மூளைக்கு விநியோகிக்கப்படலாம் என்பது அவர்களது கருத்து.

முன்பு இக் கலங்கள் உடலின் பிற பகுதிகளிலிருந்து குருதி மூலமாகவே மூளைக்கு வழங்கப்படுகிறது என விஞ்ஞானிகள் எண்ணியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE