செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!

22

யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில்  ஆரம்ப  பிரிவு மாணவர்கள்  பலருக்கு  கற்றல் உபகாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினயின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE