மது பாட்டில்களில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்பு கேட்டது அமெரிக்க நிறுவனம்

110
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும், நியூ இங்கிலாந்து ப்ரூவிங் என்ற மது உற்பத்தி நிறுவனம் மகாத்மா காந்தியின் படங்களை பீர் பாட்டில் மற்றும் பாட்டில்களில் உபயோகித்ததற்காக இன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

’காந்தி-பாட்’ என்ற பெயரில் தனது பீரை விற்று வரும் இந்த நிறுவனம் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், இளைய தலைமுறையினரிடம் அவரது புகழை கொண்டு சேர்க்கும் எண்ணத்திலேயே இதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

மது புட்டிகள் மீது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டிருப்பது இந்திய சட்டங்களின் கீழ் கடும் கண்டனத்துக்கும், தண்டனைக்கும் உரியது என்று சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுங்கரி ஜனார்தன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

அந்த மனு நாளை நீதிமன்ற விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அமெரிக்க நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது

SHARE