ரவீந்திர ஜடேஜாவுக்கு தோள்பட்டை காயம்: உலக கோப்பைக்கான அணியில் யுவராஜ் இடம்பெற வாய்ப்பு

112
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 30 பேர் கொண்ட இப்பட்டியலில் முன்னணி வீரர்களான காம்பீர், யுவராஜ், சேவக், ஜாகிர்கான் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இடம்பெறவில்லை.

இப்பட்டியலில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பளிக்காதது முன்னாள் வீரர்கள் பலருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பலத்த அதிர்ச்சியை அளித்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத போதிலும் ரஞ்சி போட்டிக்கான அணியில் பங்கேற்ற யுவராஜ் மூன்று சதங்களையும், ஒரு அரை சதத்தையும் பூர்த்தி செய்து தான் இன்னும் பார்மில் உள்ளதை உறுதி செய்தார். இந்நிலையில் இடது கை சுழற்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஜடேஜாவுக்கு தோள் பட்டை காயம் ஏற்பட்டது. வரும் ஜனவரி 7-ந் திகதி உலக கோப்பைக்கான இறுதிப்பட்டியல் வெளியாக உள்ள நிலையில் அதற்குள் அவரது காயம் குணமாகுமா என்று சந்தேகம் நிலவுகிறது.

இதனால் ஜடேஜாவுக்கு பதிலாக யுவராஜ் சிங் இடம்பெறலாம் என தெரிகிறது.

SHARE